கோலாலம்பூர், சிலாங்கூர் பகுதிகளில் இரவு 8 மணி வரை இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை

23 அக்டோபர் 2025, 9:49 AM
கோலாலம்பூர், சிலாங்கூர் பகுதிகளில் இரவு 8 மணி வரை இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை
கோலாலம்பூர், சிலாங்கூர் பகுதிகளில் இரவு 8 மணி வரை இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை

ஷா ஆலம், அக் 23: சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா முழுவதும் மாலை 8 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய வானிலைத் துறையான மெட் மலேசியா இன்று அறிவித்துள்ளது.

பெர்லீஸ், கெடா, பினாங்கு, பேராக் மற்றும் மலாக்கா ஆகிய மாநிலங்களிலும் மேலும் திரங்கானு, பஹாங், நெகிரி செம்பிலான், ஜொகூர், சரவாக் மற்றும் சபா மாநிலங்களின் சில மாவட்டங்களிலும் இதே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை குறுகிய கால எச்சரிக்கை ஆகும் மற்றும் ஒவ்வொரு வெளியீட்டிற்கும் அதிகபட்சம் ஆறு மணிநேரம் வரை நீடிக்கும்.

மேல் விவரங்களுக்கு பொது மக்கள் www.met.gov.my என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தையும், வானிலைத் துறையின் சமூக ஊடக கணக்குகளையும் பின்தொடரவும், myCuaca செயலியைப் பதிவிறக்கம் செய்து, சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களைப் பெறவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.