சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா பகுதிகளில் இன்று மாலை 6 மணி வரை கனமழை பெய்யும்

20 அக்டோபர் 2025, 8:04 AM
சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா பகுதிகளில் இன்று மாலை 6 மணி வரை கனமழை பெய்யும்

கோலாலம்பூர், அக் 20: சிலங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா முழுவதும் இன்று மாலை 6 மணி வரை கனமழை பெய்யும் என மலேசிய வானிலைத் துறையான மெட்மலேசியா தெரிவித்துள்ளது.

அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், இதே போன்ற வானிலை கிழக்கு கடற்கரை மாநிலங்களான கிளந்தான், திரங்கானு, நெகிரி செம்பிலான் முழுவதும், மேலும் பேராக், பஹாங், ஜொகூர், சரவாக் மற்றும் சபா மாநிலங்களின் சில மாவட்டங்களிலும் எதிர்பார்க்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை குறுகிய கால எச்சரிக்கை ஆகும். இது ஒவ்வொரு வெளியீட்டிற்கும் அதிகபட்சம் ஆறு மணி நேரம் வரை செல்லுபடியாகும்.

பொது மக்கள் வானிலைத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் www.met.gov.my மற்றும் அவர்களின் சமூக ஊடக தளங்கள், அல்லது myCuaca செயலியைப் பயன்படுத்தி துல்லியமான தகவல்களைப் பெறுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.