ஷா ஆலம், செப். 14- கோல சிலாங்கூர், உலு சிலாங்கூர், கிள்ளான் கோம்பாக், பெட்டாலிங் மற்றும் உலு லங்காட் ஆகிய மாவட்டங்களில் இன்று மாலை 5.00 மணி வரை
இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளது.
லாபுவான், கோலாலம்பூர் மற்றும் கிளந்தான், திரங்கானு, பகாங், நெகிரி செம்பிலான், சரவாக் மற்றும் சபா ஆகிய மாநிலங்களில் உள்ள பல பகுதிகளிலும் இதே வானிலை நிலவும் என அது எச்சரித்துள்ளது.
மணிக்கு 20 மில்லிமீட்டருக்கும் அதிகமான தீவிர கனமழைக்கான அறிகுறிகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் பட்சத்தில் இந்த எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
இது ஒவ்வொரு வெளியீட்டிற்கும் அதிகபட்சம் ஆறு மணி நேரம் வரை செல்லுபடியாகக்கூடிய ஒரு குறுகிய கால எச்சரிக்கையாகும்,
வானிலை தொடர்பான தகவல்களுக்கு பொதுமக்கள் www.met.gov.my என்ற அதிகாரப்பூர்வ வானிலை ஆய்வு மையத்தின் வலைத்தளத்தை வலம் வரலாம். மேலும் அத்துறையின் சமூக ஊடகங்களையும் பின்தொடரலாம். அண்மைய மற்றும் மிகவும் துல்லியமான தகவல்களைப் பெற myCuaca செயலியைப் பதிவிறக்க பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கோலாலம்பூர், சிலாங்கூரில் மாலை 5.00 மணி வரை அடைமழை
14 செப்டெம்பர் 2025, 7:26 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
சுக்மா 2026: டாருள் ஏஹ்சான் நீச்சல் மைய மேம்பாட்டு பணிகள் மே மாதத்தில் முடிவு பெறும்
Evelyn Moses
30 அக்டோபர் 2025

national
சிலாங்கூர் மாநில சட்டமன்ற கூட்டம் திட்டமிட்டபடி நவம்பர் 14 அன்று தொடங்கும்
Shalini Rajamogun
29 அக்டோபர் 2025

selangor
சிலாங்கூர் பட்ஜெட் 2026இல் தொழில்முனைவோருக்கு தொடர்ந்து ஆதரவு தேவை
Shalini Rajamogun
28 அக்டோபர் 2025

national
கோலாலம்பூர் விமான நிலைய ஏரோட்ரெயின் மீண்டும் கோளாறு: பயணிகள் அவதி
Mavitthran
28 அக்டோபர் 2025

உங்கள் கருத்து என்ன?




