ஷா ஆலம், அக் 28: சிலாங்கூர் பட்ஜெட் 2026இல் நிதி ஆதரவு, டிஜிட்டல் திறன் மேம்பாடு மற்றும் வணிக வளர்ச்சி வாய்ப்புகளில் தொடர்ந்து கவனம் செலுத்தப்படும் என என்று உள்நாட்டு வணிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
உள்நாட்டு வணிகர்களுக்கு வழங்கப்படும் நிதி உதவிகளை அதிகரிக்க வேண்டும். இது அவர்களுக்கு போட்டித் திறனை வலுப்படுத்தவும், தற்போதைய பொருளாதார மாற்றங்களுக்கு ஏற்ப தயார்ப்படுத்தி கொள்ள உதவும் என ``Homegrown Checkgoo Resources`` நிறுவனத்தின் உரிமையாளர் இந்தான் ஷைடாதுல் ஷிமா முகமட் சரிப் (39) கூறினார்.
“நிதி உதவி மட்டுமல்ல; வணிகங்களில் டிஜிட்டல் திறன் பயிற்சிகள் மற்றும் வகுப்புகளை மாநில அரசு அதிகரிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்,
தற்போதையே வணிகர்கள் நிதி அறிவு மட்டுமின்றி, டிஜிட்டல் திறன்களையும் கொண்டிருக்க வேண்டும், இல்லையெனில் அவர்கள் இத்துறையில் நிலைத்து நிற்க முடியாது.”
சிறு வணிகர்களுக்கு கூடுதல் மூலதனம் மிகவும் அவசியம். இது அவர்களுக்கு வணிகத்தை விரிவுபடுத்தவும், புதிய திட்டங்களை செயல்படுத்தவும் உதவும் என ``Crystal Sofea Resources`` நிறுவனத்தின் உரிமையாளர் நோர் ஹாசிசா ஓமார் (58) கூறினார்,
“சிறு வணிகர்களின் திறன் அதிகம், ஆனால், மூலதனம் குறைவு. இது அவர்களின் வளர்ச்சிக்கு முக்கிய தடையாக உள்ளது. எதிர்வரும் பட்ஜெட்டில் அவர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்க வேண்டும்.” என்றார்.
இந்த பட்ஜெட்டில் நிதி ஆதரவு, டிஜிட்டல் திறன் வளர்ச்சி மற்றும் வணிக வளர்ச்சிக்கு முக்கிய வாய்ப்புகள் வழங்கப்படும் என வணிகர்கள் நம்புகின்றனர். இதன் மூலம் சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் மேலும் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




