கோலாலம்பூர், அக் 28: இன்று அதிகாலையில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் ஏரோட்ரெயின் சேவை மீண்டும் ஒரு தொழில்நுட்பக் கோளாறை எதிர்கொண்டது.
இதில் பாதிக்கப்பட்ட பயணிகள் அனைவரும் தங்கள் உடைமைகளைச் சுமந்துகொண்டு இருள் சூழ்ந்த தண்டவாளப் பாதையில் நடக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஏரோட்ரெயின் சேவை KLIA-வின் பிரதான முனையம் மற்றும் செயற்கைக்கோள் கட்டிடம் ஆகியவற்றை இணைக்கிறது. மலேசிய விமான நிலையங்கள் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (MAHB) இந்தச் சம்பவம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடவில்லை.
இந்தக் கோளாறு, விமான நிலையத்தின் உள்போக்குவரத்து அமைப்பின் நம்பகத்தன்மை குறித்த பொதுமக்களின் அதிருப்தியை அதிகரித்துள்ளது.
RM456 மில்லியன் மதிப்பிலான மேம்பாடு திட்டத்திற்குப் பின், ஜூலை 1, 2025 அன்று மீண்டும் ஏரோட்ரெயின் சேவை தொடங்கப்பட்டது. இருப்பினும், தற்போது கோளாறு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




