ad

சுக்மா 2026: டாருள் ஏஹ்சான் நீச்சல் மைய மேம்பாட்டு பணிகள் மே மாதத்தில் முடிவு பெறும்

30 அக்டோபர் 2025, 6:09 AM
சுக்மா 2026: டாருள் ஏஹ்சான் நீச்சல் மைய மேம்பாட்டு பணிகள் மே மாதத்தில் முடிவு பெறும்

ஷா ஆலம், அக் 30 — சிலாங்கூர் 2026 மலேசியா விளையாட்டுப் போட்டிக்கான (சுக்மா) முக்கிய தளங்களில் ஒன்றான டாருள் ஏஹ்சான் நீச்சல் மையத்தை மேம்படுத்தும் பணிகள் வரும் மே மாத இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக சிலாங்கூர் மாநில விளையாட்டு துறையின் மேம்பாட்டு செயற்குழு உறுப்பினர் முகமட் நஜ்வான் ஹலிமி தெரிவித்தார்.

“தற்போது மேம்படுத்தும் பணிகள் சீராகவும் திட்டமிட்ட அட்டவணைக்கு இணையாகவும் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், சுபாங்கில் உள்ள துப்பாக்கி சுடும் மைதானம் நிர்வாகச் செயல்முறையில் உள்ளதாகவும் விரைவில் மேம்படுத்தும் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

மேலும் மற்ற விளையாட்டு அரங்குகளுக்கான பணிகள் உள்ளூர் ஆணையங்களால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார் சிலாங்கூர் 2026 சுக்மா வரும் ஆகஸ்ட் 15 முதல் 24 வரை நடைபெறும். அதனைத் தொடர்ந்து பாரா சுக்மா செப்டம்பர் 5 முதல் 14 வரை நடைபெறும். திறப்பு விழா சிப்பாங் சர்வதேச சுற்றுப்பாதையில் (SIC) நடத்தப்படும்.

இந்த முறை மொத்தம் 37 விளையாட்டுகளில் 474 நிகழ்ச்சிகள் நடைபெறும். இதில் ரக்பி உள்ளிட்ட 30 முக்கிய விளையாட்டுகளும், இ-ஸ்போர்ட்ஸ், கிரிக்கெட் மற்றும் சிலம்பம் உள்ளிட்ட ஏழு கூடுதல் விளையாட்டுகளும் இடம்பெறுகின்றன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.