ஷா ஆலம், செப். 4 - பொது இடங்களில் காணப்படும் பழைய வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அம்பாங் ஜெயா நகராண்மைக்கழகம், இவ்வாண்டு முழுவதும் கைவிடப்பட்ட 276 கார்களுக்கான உரிமையை நீக்கியுள்ளது.
கடந்த ஆண்டு மற்றும் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் வரை பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 1,386 புகார்களின் அடிப்படையில் 1,139 கைவிடப்பட்ட கார்களை வெற்றிகரமாக அப்புறப்படுத்தப்பட்டதாக நகராண்மைக் கழகம் தெரிவித்தது.
பொது இடங்களில் சேதமடைந்த மற்றும் கைவிடப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை பெருகுவதை கட்டுப்படுத்தும் முயற்சியாக நகராண்மைக் கழகம் அமலாக்கத் துறை மூலம் நீதிமன்ற நடவடிக்கை எடுத்து கைவிடப்பட்ட வாகனங்கள் பிரச்சனையைத் தீர்க்க முயன்று வருகிறது.
இதன் அடிப்படையில் 562 விசாரணை அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் 441 ஆவணங்கள் வாகனங்களை உரிமை நீக்கம் தொடர்பான நீதிமன்ற உத்தரவுகளைப் பெற்றுள்ளன என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
பொதுமக்கள் தாமாக முன்வந்து வாகனங்களை அப்புறப்படுத்துவதற்கு உதவுவதற்காக எம்.பி ஏ ஜே.வின் கைவிடப்பட்ட வாகன ஓரிட மைய சேவையைப் பயன்படுத்தி வாகன உரிமையை ரத்து செய்யுமாறு பரிந்துரைக்கப்படுகிறது.
சாலைப் போக்குவரத்துத் துறையில் உரிமம் ரத்து செய்யப்பட்ட பிறகு கைவிடப்பட்ட கார்களை நிர்வகிக்க இந்த ஓரிட மையம் பொதுமக்களுக்கு உதவுகிறது. இதன் வழி சுத்தமான மற்றும் பாதுகாப்பான அம்பாங் ஜெயா நகர சூழலை உருவாக்க உதவுகிறது என்று நகராண்மைக்கழகம் குறிப்பிட்டது.
கைவிடப்பட்ட 1,100 கார்களை அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் அகற்றியது
4 செப்டெம்பர் 2025, 3:44 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
அம்பாங் அடுக்குமாடிக் குடியிருப்பில் டிங்கி தடுப்பு நடவடிக்கை; 24 அபராதங்கள் விதிப்பு
Media Selangor Team
17 ஆகஸ்ட் 2026

selangor
சமூக ஊடகங்களில் வெளியாகும் புகார்கள் ; ஊராட்சி மன்றங்கள் விரைந்து செயல்பட வேண்டும்
Dewi Abdul Rahman
8 ஆகஸ்ட் 2026

selangor
20 ஆண்டுகளாக நீடித்த தாசிக் பெர்மாய் திடீர் வெள்ளப் பிரச்சனைக்குத் தீர்வு
Shalini Rajamogun
27 ஜூலை 2026

selangor
MPAJ வீடு வீடாகச் சென்று நிலுவையில் உள்ள வரி பாக்கிகளை வசூலிக்கிறது
Latchumy Ramamoorthy
5 ஜூலை 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



