ஞாயிறு முதல் 100 ரிங்கிட் சாரா திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்களை வாங்கலாம்

25 ஆகஸ்ட் 2025, 3:24 AM
ஞாயிறு முதல் 100 ரிங்கிட் சாரா திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்களை வாங்கலாம்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 25 - 100 ரிங்கிட் அடிப்படை ரஹ்மா நன்கொடை (SARA) திட்டத்தின் மூலம் ஆகஸ்டு 31ஆம் தேதி முதல் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்.

ஒரு முறைக்கான இந்த உதவித் தொகை தானாகவே பெறுநரின் அடையாள அட்டையில் வரவு வைக்கப்படும். இந்த உதவியின் மூலம் அவர்கள் 90,000க்கும் மேற்பட்ட அத்தியாவசிய பொருட்களை ரொக்கமின்றி வாங்க முடியும்.

மேலும், 22 மில்லியன் மக்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த திட்டத்திற்காக 2 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக வருமான நிலை அல்லது குடும்ப வருமானத்தின் வகையைப் பொருட்படுத்தாமல் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவருக்கும் இந்த உதவி வழங்கப்படுகிறது.

மைடின், லோட்டஸ், எக்கோன் சேவ் மற்றும் 99 ஸ்பீட்மார்ட் போன்ற முக்கிய பல்பொருள் விற்பனை மையங்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள சில்லறை விற்பனைக் கடைகள் உட்பட 4,100க்கும் மேற்பட்ட கடைகளில் டிசம்பர் 31 வரை பொதுமக்கள் அடிப்படை பொருட்களை வாங்கலாம்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.