ஆசிய மகளிர் கிண்ண காற்பந்தாட்டத்தில் ஈரானிடம் மலேசியா தோல்வி கண்டது

8 ஆகஸ்ட் 2025, 5:07 AM
ஆசிய மகளிர் கிண்ண காற்பந்தாட்டத்தில் ஈரானிடம் மலேசியா தோல்வி கண்டது

கோலாலம்பூர், ஆகஸ்ட் 8 - கோலாலம்பூர் காற்பந்து அரங்கில் நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்ட ஆசிய மகளிர் கிண்ண காற்பந்தாட்டம் நடைபெற்றது. அதில் குழுவுக்கான ஆட்டத்தில் மலேசியா 0-3 என்ற கோல்களில் ஈரானிடம் தோல்வி கண்டது.

முதல் பாதி ஆட்டத்தின் 13 மற்றும் 28-வது நிமிடங்களில் இரு கோல்களை அடித்து ஈரான் மலேசியாவை பின்னுக்குத் தள்ளியது.

பின், இரண்டாம் பாதி ஆட்டம் முடிவடையும் நேரத்தில் ஈரானின் அசல் கஜாரியன் தமது அணிக்கான மூன்றாவது கோலை அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

இந்த தோல்வியின் வழி புள்ளிப்பட்டியலில் மலேசியா மூன்றாவது இடத்தில் உள்ளது. மூன்று புள்ளிகளுடன் ஈரான் இரண்டாவது இடத்திலும், ஜப்பான் முதலாவது இடத்திலும் உள்ளன.

இன்று நடைபெறவிருக்கும் ஆட்டத்தில் மலேசியா ஜப்பானுடன் மோதவுள்ளது.

பெர்னாமா

வகைsukankini

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.