SELANGOR

சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல்- ஐ.நா. பாதுகாப்பு மன்றம் அவசரக் கூட்டம்

17 ஜூலை 2025, 6:16 AM
சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல்- ஐ.நா. பாதுகாப்பு மன்றம் அவசரக் கூட்டம்

நியூயார்க், ஜூலை 17 — சிரியாவின் சுவைடா பகுதி மற்றும் டமாஸ்கஸில் இஸ்ரேலிய இராணுவம்  நடத்திய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து  ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு மன்றம் இன்று அவசரக் கூட்டத்தை நடத்தவுள்ளதாக அனடோலு ஏஜென்சி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அவசரக் கூட்டத்திற்கான அழைப்பு  ஐ.நா.வில் உள்ள சிரியாவின் நிரந்தர பணி அதிகாரியால்  கோரப்பட்டு பாதுகாப்பு மன்றத்தின் தற்போதைய உறுப்பினரான அல்ஜீரியாவால் அங்கீகரிக்கப்பட்டது என அனடோலு செய்தி நிறுவனத்திற்கு கிடைத்த தகவல்கள் மூலம் தெரியவந்தது.

இந்தக் கூட்டம் பிற்பகலில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிரியாவின் பாதுகாப்பு அமைச்சு மற்றும் அதிபர் மாளிகைக்கு அருகிலுள்ள பகுதிகளை குறிவைத்து டமாஸ்கஸ் மீது இஸ்ரேல் நேற்று வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

சிரியப் படைகள்  பின் வாங்காவிட்டால் தாக்குதல்கள் தொடரும் என்று இஸ்ரேல்  எச்சரித்த நிலையில் தெற்கு சிரியாவின் சுவைடா மாநிலத்தில் இஸ்ரேல் மீண்டும்  இந்த தாக்குதல்களை நடத்தியது.

ஆயுதமேந்திய ட்ரூஸ் மற்றும் பெடோயின் குழுக்களுக்கு இடையிலான மோதல்களில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து   அப்பகுதியில் அமைதியை மீட்டெடுக்க  சிரியா அரசு துருப்புக்களை அனுப்பியது.

இந்த இராணுவ  நடவடிக்கை ட்ரூஸ் சிறுபான்மையினரைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டவை என்று இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.