SELANGOR

மூத்தக் குடிமக்களுக்கு இலவச இன்புளுயென்ஸா தடுப்பூசி- எம்.பி.ஏ.ஜே. வழங்குகிறது

9 ஜூன் 2025, 5:02 PM
மூத்தக் குடிமக்களுக்கு இலவச இன்புளுயென்ஸா தடுப்பூசி- எம்.பி.ஏ.ஜே. வழங்குகிறது

ஷா ஆலம், ஜூன் 9 - தகுதியுள்ள மூத்த குடிமக்களுக்கு இலவச இன்புளுயென்ஸா தடுப்பூசிகளை அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம்  (எம்.பி.ஏ.ஜே.) வரும் ஜூன் 20 ஆம்  தேதி வழங்குகிறது.

இந்த தடுப்பூசியைப் பெற விரும்பும் விரும்பும் நபர்கள் காலை 9.00  மணி முதல் மதியம் 1.00 மணி வரை எம்.பி.ஏ.ஜே. கிளினிக்கில்  நடைபெறும் தடுப்பூசி இயக்கத்தில் கலந்து கொள்ளலாம் என்று நகராண்மைக் கழகம் தனது முகநூல் மூலம் அறிவித்துள்ளது.

உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். வயதானவர்கள் மற்றும் நாள்பட்ட நோயாளிகள் அதிக ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர்.  தடுப்பூசி மூலம் தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதே சிறந்த பாதுகாப்பு என்று அது குறிப்பிட்டது.

அறுபது வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும்  நீரிழிவு, இருதய நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக பிரச்சினைகள் போன்ற குறைந்தது ஒரு நோயைக் கொண்டவர்கள் இந்த திட்டத்தில் பங்கேற்கலாம்.

கூடுதல் தகவலுக்கு எம்.பி.ஏ.ஜே. கிளினிக்கை 03-9212 7882 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.