SELANGOR

பதின்ம வயது பெண்கள் இலவச மனிதப் பாப்பிலோமா வைரஸ் (HPV) தடுப்பூசிக்கு விண்ணப்பிக்கலாம்

9 ஜூன் 2025, 4:21 PM
பதின்ம வயது பெண்கள் இலவச மனிதப் பாப்பிலோமா வைரஸ் (HPV) தடுப்பூசிக்கு விண்ணப்பிக்கலாம்

ஷா ஆலம், ஜூன் 9 : இதுவரை தடுப்பூசி போடப்படாதப் பதின்ம வயது பெண்களுக்கு 1,000 இலவச மனித பாப்பிலோமாப் வைரஸ் (HPV) தடுப்பூசிகளை கோத்தா கெமுனிங் தொகுதி அலுவலகம் வழங்குகிறது.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு எதிரான ஆரம்பகால தடுப்பு நடவடிக்கையாக, தடுப்பூசி போடப்படாத 13 முதல் 20 வயதுக்குட்பட்ட பதின்ம வயது பெண்களுக்கு இந்த திட்டம் திறந்திருக்கும் என்று அதன் பிரதிநிதி எஸ். பிரீகாஸ் அறிவித்தார்.

இத்திட்டத்திற்கு https://forms.gle/oBKLsfLxr89ZUSq18 என்ற இணைப்பின் மூலம் விண்ணப்பம் செய்யலாம் அல்லது கோத்தா கெமுனிங் தொகுதியின் அலுவலகத்தை 011-1257 5460 அல்லது 010-211 8016 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த திட்டம் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. மேலும், தடுப்பூசி மற்றும் மருத்துவ தளவாடங்களுக்கு முன்கூட்டியே முன் பதிவு செய்ய வேண்டும்.

மலேசியா 2010 முதல் தேசிய HPV நோய்த்தடுப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் படிவம் ஒன்றை சேர்ந்த பெண் மாணவர்களை முக்கிய பெறுநர்களாக இலக்காகக் கொண்டுள்ளது.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் தொற்றுநோய்களிலிருந்து இளைஞர்களைப் பாதுகாப்பதற்கு HPV தடுப்பூசி முக்கியமானது, மேலும், பாதுகாப்பிற்கு இப்போது ஒரு டோஸ் மட்டுமே தேவைப்படுகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.