SELANGOR

10,000 லெமாங் சிறப்பு விலையில் விற்கப்படும்

3 ஜூன் 2025, 2:31 PM
10,000 லெமாங் சிறப்பு விலையில் விற்கப்படும்

ஷா ஆலம், ஜூன் 3: எதிர்வரும் வியாழக்கிழமை, உலு லங்காட் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களுக்கு மொத்தம் 10,000 பாரம்பரிய லெமாங் சிறப்பு விலையில் விற்கப்படும்.

`Langek Melomang Vaganza 2025 ` திட்டத்தின் கீழ் RM20க்கு மூன்று லெமாங் குச்சிகள் விற்கப்படும் என உலு லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். வழக்கமாக இது சுமார் RM48 வெள்ளிக்கு விற்கப்படுவது குறிப்பிடத்க்கது.

ஹரி ராயா ஐடிலாடா கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்த நிகழ்ச்சி பத்து 14 இல் உள்ள பெங்குலு முகிம் உலு லங்காட் வளாகத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் என முகமட் சானி ஹம்சா தெரிவித்தார்.

“நிகழ்வு நடைபெறும் இடத்தில் மட்டுமே குறிப்பிட்ட விலையில் கையிருப்பு இருக்கும் வரை லெமாங்கை வாங்க முடியும். மேல் தகவலுக்கு, 010-878 0857 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்,” என்று அவர் முகநூலில் தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.