SELANGOR

கோத்தா கெமுனிங் தொகுதி ஏற்பாட்டில்  இன்புளூயென்ஸா தடுப்பூசித் திட்டம்

30 மே 2025, 4:37 PM
கோத்தா கெமுனிங் தொகுதி ஏற்பாட்டில்  இன்புளூயென்ஸா தடுப்பூசித் திட்டம்

ஷா ஆலம், மே 30 - கோத்தா கெமுனிங் தொகுதி ஏற்பாட்டில்  இலவச இன்புளூயென்ஸா தடுப்பூசி இயக்கம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

இங்குள்ள செக்சன் 33, கெமுனிங் உத்தாமாவிலுள்ள கோத்தா கெமுனிங் தொகுதி சேவை மையத்தில் காலை 9.00 மணி தொடங்கி 11.00 மணி வரை இந்த தடுப்பூசி இயக்கம் நடைபெறும்.

முதலில் வரும் 200 பேருக்கு இந்த தடுப்பூசித் திட்டத்தில்  வாய்ப்பு வழங்கப்படும் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பிரகாஷ்  கூறினார்.

குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினருக்கு இந்த இலவச இன்புளுயென்ஸா தடுப்பூசிகளை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

இந்த  தடுப்பூசியை இதுவரை பெறாத  6 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் இந்த திட்டத்தில் பங்கேற்கலாம். இந்த இயக்கம்  சீராக நடைபெறுவதை உறுதிசெய்ய https://forms.gle/1aqZtTpPEwe9i1JN7 என்ற இணைப்பின் வழி முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அவர் சமூக ஊடகங்களில் வெளியிட்டப் பதிவில் கேட்டுக் கொண்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.