ஷா ஆலம், ஜன 24 : கோத்தா அங்கேரிக்கில் மாநில அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட இலவசச் சுகாதாரப் பரிசோதனை திட்டம் எதிர்வரும் ஞாயிறு (2/2/25) அன்று நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வு காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை சூராவ் அல்-அன்சோர் செக்ஷன் 2, ஷா ஆலமில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் தெரிவித்தார்.
மேலும், இதயம், சிறுநீரகம், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய், கண்கள், காதுகள்
மற்றும் பற்கள் போன்ற சுகாதார பரிசோதனைகளை வழங்கும் இத்திட்டத்தில்
பங்கேற்கப் பொதுமக்கள் அழைக்கப்படுகிறார்கள்.
செலாங்கா செயலியில் பதிவு செய்ய பொதுமக்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். செலாங்காவில் உள்ள படிவத்தின் மூலம் ஆபத்து காரணிகளின் மதிப்பீட்டின் அடிப்படையில் பரிசோதனை வழங்கப்படுகிறது.
செலங்காவில் பதிவு செய்வது தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் 1800 226 600
என்ற எண்ணில் “Selcare“ஐ தொடர்பு கொள்ளவும்” என்று முகநூலில்
தெரிவிக்கப்பட்டது.


