SELANGOR

புக்கிட் லஞ்சன் தொகுதியில் 600 ஜோம் ஷோப்பிங் வவுச்சர்கள் விநியோகம்

23 ஜனவரி 2025, 3:31 AM
புக்கிட் லஞ்சன் தொகுதியில் 600 ஜோம் ஷோப்பிங் வவுச்சர்கள் விநியோகம்

சுங்கை பூலோ, ஜன. 22: சீனப் புத்தாண்டை முன்னிட்டு புக்கிட் லஞ்சன் தொகுதியில் மொத்தம் 600 ஜோம் ஷோப்பிங் வவுச்சர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

சிலாங்கூர் அரசாங்கம் எற்பாடு செய்த ஜோம் ஷோப்பிங் வவுச்சர்களை பெறுவதற்குத் தேர்ந்தெடுக்கப்படாத நபர்களுக்கு RM50 மதிப்புதக்க வவுச்சர்களையும் அவரது தரப்பு வழங்கியதாக சட்டமன்ற உறுப்பினர் புவா பெய் லிங் கூறினார்

"இங்கு வசிப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் சீனர்கள், அதனால்தான் சீனப் புத்தாண்டுக்குத் தயாராகவும் அவர்களின் சுமையைக் குறைக்கவும் வவுச்சர்களை அதிகரிக்க நான் முன்முயற்சி எடுத்தேன்," என்று அவர் கூறினார்.

புக்கிட் லஞ்சன் தொகுதியில் உள்ள கம்போங் டேசா அமானில் ஆற்றங்கரை மேம்படுத்தும் திட்டத்தை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு கூறினார்.

2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சமர்பிக்கும்போது, ஜோம் ஷோப்பிங் (பெருநாள்) பிரயான் வவுச்சர்களுக்காக RM12 மில்லியன் ஒதுக்கப்பட்டதாக டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்தார்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.