கிள்ளான், ஜன 20: சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பண்டமாரான் தொகுதியில் மொத்தம் 550 பெறுநர்கள் ஜோம் ஷோப்பிங் வவுச்சர்களைப் பெற்றனர்.
நேற்று முதல் அவர்கள் அனைவருக்கும் RM200 மதிப்புள்ள வவுச்சர்கள் விநியோகிக்க தொடங்கியதாக சட்டமன்ற உறுப்பினர் தோனி லியோங் கூறினார்.
"இந்த ஆண்டு, பெறுநர்களின் எண்ணிக்கை 550ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பெறுநர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியதற்காக சிலாங்கூர் அரசாங்கத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் நன்றி தெரிவித்தார்.
இந்த உதவி குறைந்த வருமானம் கொண்ட மக்கள் பண்டிகையைக் கொண்டாட உதவுகிறது," என்று அவர் கூறினார்.
கடந்த டிசம்பரில், இந்த சீனப் புத்தாண்டை முன்னிட்டு RM200 மதிப்புள்ள 23,800 வவுச்சர்களை வழங்க RM4.76 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு வீ.பாப்பாராய்டு தெரிவித்தார்.
மேலும், 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சமர்ப்பிக்கும் போது ஜோம் ஷோப்பிங் பேராயன் வவுச்சர்களுக்காக RM12 மில்லியன் ஒதுக்கப்பட்டதாக டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்தார்.


