SELANGOR

சிலாங்கூரில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த தொழில்துறைமுனைவோருக்கு அழைப்பு

20 ஜனவரி 2025, 6:54 AM
சிலாங்கூரில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த தொழில்துறைமுனைவோருக்கு அழைப்பு

கோலா லங்காட், ஜன 20: 2025ஆம் ஆண்டு சிலாங்கூருக்கு வருகை தாருங்கள் பிரச்சாரத்தை (TMS2025) முன்னிட்டு சுற்றுலாத் துறையை மேம்படுத்த கைகோர்க்குமாறு தொழில்துறைமுனைவோருக்கு சுற்றுலா சிலாங்கூர் அழைப்பு விடுத்துள்ளது.

இந்த ஆண்டு எட்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் இலக்கை அடையும் முயற்சியில் சங்கங்கள் மற்றும் சமூகங்களுக்கு தனது தரப்பு மானியங்களை வழங்குகிறது என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி சுவா யீ லிங் கூறினார்.

"ஜெஞ்சரோம் கலாச்சார சங்கம், சுற்றுலா சிலாங்கூரில் இருந்து முதல் கட்டமாக RM10,000 மானியத்தை வெற்றிகரமாகப் பெற்றுள்ளது.

"இந்த மானியத்தின் மூலம், சிலாங்கூரில் சுற்றுலாவை மேம்படுத்த சுற்றுலா சிலாங்கூருடன் இணைந்து பணியாற்றுவதற்கு பல சங்கங்கள் மற்றும் சமூகங்களை ஊக்குவிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்," என அவர் கூறினார்.

கடந்த வாரம் ஜெஞ்சரோமில் உள்ள கம்போங் பஹாகியாவில் சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தின் தொடக்க நிகழ்வில் அவர் இவ்வாறு கூறினார்.

முன்னதாக, சுற்றுலாத் துறை தொழில்துறைமுனைவோரை ஊக்குவிப்பதற்காக RM200,000 மானியத்திற்கு மாநில அரசு ஒப்புதல் அளித்தது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.