சுபாங் ஜெயா, ஜன 20: இந்த மாத இறுதியில் கொண்டாடப்படும் சீனப் புத்தாண்டை முன்னிட்டு தாமான் மேடான் தொகுதி அத்தொகுதியில் வாழும் 200 குறைந்த வருமான பிரிவை சார்ந்த சீனர்களுக்கு RM200 மதிப்புள்ள வவுச்சர்கள் வழங்கப்பட்டது.
குறைந்த வருமானம் கொண்ட குடியிருப்பாளருக்கு ஏற்பாடு செய்யப்பட்ட இத்திட்டம் அவர்களின் செலவுகளை குறைக்கும் என்று அத்தொகுதி ஒருங்கிணைப்பாளர் கூறினார்.
"இந்த உதவியைப் பெற்ற குடியிருப்பாளர்கள் குறைந்த வருமானம் கொண்ட தாமான் மேடான் வாக்காளர்கள் ஆவர். அவர்கள் மற்ற உதவிகளைப் பெறவில்லை என்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம், இதனால் அரசின் உதவி அனைவருக்கும் நியாயமானதாக இருக்கும்" என்று ஹலிமி அபு பக்கர் கூறினார்.
கடந்த டிசம்பரில், இந்த சீனப் புத்தாண்டை முன்னிட்டு RM200 மதிப்புள்ள 23,800 வவுச்சர்களை வழங்க RM4.76 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு வீ.பாப்பாராய்டு கூறினார்
மேலும், 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சமர்ப்பிக்கும் போது ஜோம் ஷோப்பிங் பிராயன் வவுச்சர்களுக்காக RM12 மில்லியன் ஒதுக்கப்பட்டதாக டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்தார்.


