ஷா ஆலம், ஜன 15: ஜனவரி 1 முதல் நிலுவைத் தொகையின்றி 2025 ஆண்டுக்கான மதிப்பீட்டு வரியை இணையம் வழி செலுத்தும் முதல் 15,000 கணக்குகளுக்கு காஜாங் நகராண்மை கழகம் தள்ளுபடி வழங்கும்.
பிப்ரவரி 28 வரை MyMPKj4u செயலி மூலம் வரி செலுத்தும் முதல் 5,000 கணக்குகளுக்கு RM15 தள்ளுபடி வழங்கப்படும் என பிபிடி தெரிவித்தது.
மேலும், eBAYAR, PBTPay, JomPAY, Kawanku Phone Banking மற்றும் Maybank, AmBank, HSBC, RHB மற்றும் Bank Rakyat ஆகியவற்றின் இணைய தளங்கள் மூலம் பணம் செலுத்தும் முதல் 10,000 கணக்குகளுக்கு RM10 தள்ளுபடி வழங்கப்படும்.
"நிர்ணயிக்கப்பட்ட தேதியில் நிலுவைத் தொகை வைக்கக் கூடாது அல்லது அதிகப்படியான பணம் செலுத்தக்கூடாது" என்று ஜனவரி 13 அன்று அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவிக்கப்பட்டது.
எம்.பி.கே.ஜே. மதிப்பீட்டு வரியின் பில்கள் அனுப்பப்படாது. பொதுமக்கள் மதிப்பீட்டு வரிகள் தொடர்பான தகவல்களை இணையத்தில் சரிபார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.


