SELANGOR

29,019 தாவாஸ் உறுப்பினர்களுக்கு பள்ளி உபகரணங்கள் வழங்கப்பட்டது

15 ஜனவரி 2025, 6:00 AM
29,019 தாவாஸ் உறுப்பினர்களுக்கு பள்ளி உபகரணங்கள் வழங்கப்பட்டது

ஷா ஆலம், ஜன 15: இந்த ஆண்டு தாவாஸ் திட்ட உறுப்பினர்களான மொத்தம் 29,019 குழந்தைகள் முதலாம் வகுப்பில் சேரவுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் தாவாஸ் திட்டத்தின் கீழ் பள்ளி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

அனைத்து உறுப்பினர்களுக்கும் RM50 மதிப்புள்ள பள்ளிப் பைகள் மற்றும் எழுதுபொருள் செட்டுகள் வழங்கப்பட்டது என யாயாசான் வாரிசான் அனாக் சிலாங்கூர் (யவாஸ்) திட்ட மேலாண்மை நிர்வாகி முகமட் காஃபிஸ் ஆசாரி கூறினார்.

ஒவ்வொரு தொகுதியிலும் 2018 இல் பிறந்த குழந்தைகள் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அல்லது ஒருங்கிணைப்பாளர் மூலம் இந்த உதவியைப் பெற்றனர் என்று அவர் விளக்கினார்.

"இந்த உதவி மூலம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பள்ளி உபகரணங்களை வழங்குவதில் உள்ள சுமையை குறைக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்," என அவர் மீடியா சிலாங்கூர் தொடர்பு கொண்ட போது கூறினார்.

2008 இல் தொடங்கப்பட்ட மாநில நலத் திட்டங்களில் ஒன்றான தாவாஸ், சிலாங்கூரில் பிறக்கும் குழந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் மற்றும் குழந்தைகள் மூன்று வயதை அடையும் முன் இதில் பதிவு செய்ய வேண்டும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.