SELANGOR

2025 ஏஹ்சான் ரஹ்மா விற்பனை இன்று தொடங்குகிறது- பொருள்களின் எண்ணிக்கை 12ஆக உயர்வு

13 ஜனவரி 2025, 2:14 AM
2025 ஏஹ்சான் ரஹ்மா விற்பனை இன்று தொடங்குகிறது- பொருள்களின் எண்ணிக்கை 12ஆக உயர்வு
2025 ஏஹ்சான் ரஹ்மா விற்பனை இன்று தொடங்குகிறது- பொருள்களின் எண்ணிக்கை 12ஆக உயர்வு

ஷா ஆலம், ஜன. 13- சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின்

(பி.கே.பி.எஸ்.) 2025ஆம் ஆண்டிற்கான ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை

இன்று தொடங்குகிறது.

அத்தியாவசிய சமையல் பொருள்களை மலிவான விலையில்

வாங்குவதற்குரிய வாய்ப்பினை வழங்கும் இந்த ரஹ்மா விற்பனை இன்று

காலை 10.00 மணி தொடங்கி பிற்பகல் 1.00 மணி வரை கின்ராரா,

பண்டார் பாரு கிள்ளான், ரவாங், புக்கிட் மெலாவத்தி மற்றும் சுங்கை

காண்டிஸ் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. மலிவு விற்பனை

நடைபெறும் இடங்களின் பட்டியல் கீழே விளக்கப்படத்தில் இடம்

பெற்றுள்ளது.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 12.00 வெள்ளிக்கும், ஒரு தட்டு பி

கிரேட் முட்டை 10.00 வெள்ளிக்கும், இறைச்சி ஒரு பாக்கெட் 10.00

வெள்ளிக்கும், கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும், 5 கிலோ

சமையல் எண்ணெய் 2 கிலோ 10.00 வெள்ளிக்கும், 5 கிலோ அரிசி 13.00

வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

மேலும், இந்த விற்பனையில் புதிதாக சார்டின் (வெ.5.50), பீகூன் (வெ.2.50),

சோள பிஸ்கட் (வெ.3.00), சலவை சோப்பு (வெ.16.00) மற்றும்

குழந்தைகளுக்கான பெம்பர்ஸ் (வெ.12.00) ஆகிய பொருள்கள் விற்பனைக்

வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாண்டு இந்த மலிவு விற்பனையை நடத்துவதற்கு மாநில அரசு

2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 3 கோடி வெள்ளியை

ஒதுக்கீடு செய்துள்ளது. குறைந்த வருமானம் பெறும் தரப்பினர்

எதிர்நோக்கும் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பை குறைப்பதில் மாநில

அரசு காட்டி வரும் அக்கறையை இந்த திட்டம் புலப்படுத்துவதாக உள்ளது.

ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை தொடர்பான விபரங்களை

பி.கே.பி.எஸ். அகப்பக்கம் மூலமாகவும் போஸ்டரில் இடம் பெற்றுள்ள

கியூ.ஆர். குறியீட்டை ஸ்கேன் செய்வதன் வாயிலாகவும் அல்லது

http://linktr.ee/myPKPS என்ற அகப்பக்கத்தின் மூலமாகவும் அறிந்து

கொள்ளலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.