SELANGOR

விவசாய பொருட்களை மலிவு விலையில் விற்கும் கோஹிஜ்ரா

10 ஜனவரி 2025, 3:26 AM
விவசாய பொருட்களை மலிவு விலையில் விற்கும் கோஹிஜ்ரா

ஷா ஆலம், ஜன 10: விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பல இடங்களில் சிறப்புத் தோட்டங்களைக் கோஹிஜ்ரா கொண்டுள்ளது என்று அதன் பொது மேலாளர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு முதல் கோஹிஜ்ராவின் உறுப்பினர்களான மொத்தம் 75 விவசாயிகளால் தாவரங்கள் பயிரிடப்பட்டன. ஜோஹன் செத்தியா, கோலா லங்காட் மற்றும் பத்தாங் காலி ஆகியவை சம்பந்தப்பட்ட பகுதிகள் ஆகும் என்று முகமட் சியுக்ரி இஸ்மாயில் விளக்கினார்.

தர்பூசணி, அன்னாசி, மாம்பழம், கொய்யா மற்றும் காய்கறிகளை உள்ளடக்கிய இந்தத் திட்டம் பேராக்கில் உள்ள தப்பா, கம்பங் டியூ, குனோங் செமாங்கோல் ஆகிய இடங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

"பயிர்கள் மட்டுமல்ல, நாங்கள் மீன் மற்றும் இறால் மற்றும் கால்நடை பண்ணைகளையும் ஊக்குவிக்கிறோம்," என்று அவர் மீடியா சிலாங்கூர் தொடர்பு கொண்டபோது கூறினார்.

சம்பந்தப்பட்ட தோட்டங்களில் பயிரிடும் கோஹிஜ்ரா உறுப்பினர்கள் வழிகாட்டப்பட்டு, சிறந்த தரமான பயிர் விளைச்சலை உறுதிசெய்ய உர உதவி உள்ளிட்ட பலன்களைப் பெறுகிறார்கள்.

பயிர் மற்றும் கால்நடை தயாரிப்புகள் சிஜாங்காங்கில் உள்ள 7 ஏல மையத்தில் விற்கப்படும். அவை சந்தையை விட மலிவான விலையில் விற்கப்படும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.