ஷா ஆலம், ஜன 7: ஜனவரி 3 ஆம் தேதி மேற் கொண்ட அமலாக்க நடவடிக்கையின் போது ஜாலான் பெக்கான் பாருவில் இயங்கி வரும் உரிமம் இல்லாத பொழுதுபோக்கு வளாகம் ஒன்றை கிள்ளான் மாநகராட்சி மூடியது.
பொதுமக்களின் புகார்களின் அடிப்படையில் விசாரணை நடத்திய பின்னர், உரிமத் துறை மற்றும் கிள்ளான் மாநகராட்சி அமலாக்கத் துறையால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
"இந்த வளாகம் ஓய்வு நேர பொழுதுபோக்கு நடவடிக்கையாக (லவுஞ்ச்) பயன்படுத்தப்பட்டு இரண்டு மாதங்களாக இயங்கி வந்தது சோதனை நடவடிக்கையின் முடிவில் கண்டறியப்பட்டது.
"சோதனை நடவடிக்கையின் போது ஐந்து உள்ளூர் தொழிலாளர்கள் வளாகத்தில் இருந்தனர்," என்று முகநூலில் தெரிவிக்கப்பட்டது.
சிலாங்கூர் பொழுதுபோக்கு மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் சட்டம் 1995 (திருத்தப்பட்டது) 1998 மற்றும் 2001 இன் கீழ் குறிப்பிட்ட பொழுதுபோக்கு வளாகத்தை மூடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று அவர் விளக்கினார்


