ஷா ஆலம், ஜன 6: இவ்வாண்டு மாநிலம் முழுவதும் உள்ள 150,000க்கும் மேற்பட்ட தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளி மாணவர்கள் எதிர்வரும் ஏப்ரலில் தொடங்கும் சிலாங்கூர் இலவச டியூசன் திட்டத்தில் (PTRS) இலவசமாக பங்கேற்பார்கள்.
இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கல்வியறிவு மற்றும் எண்ணியல் தலையீடு திட்டத்தில் 22,000 முதல் 25,000 தொடக்கப் பள்ளி மாணவர்கள் பங்கேற்பார்கள் என எம்பிஐ தெரிவித்தது.
மாநிலம் முழுவதும் சுமார் 130,000 நான்காம் மற்றும் ஐந்தாம் படிவ மாணவர்கள் இலவச டியூசன் திட்டத்தின் பலனைப் பெறுகின்றனர் என அஹ்மட் அஸ்ரி சைனல் நோர் கூறினார்.
இத்திட்டம் தொடக்கப் பள்ளி நிலையில் படித்தல், எழுதுதல் மற்றும் எண்ணுதல் (3M) ஆகிய அடிப்படைத் திறன்களில் கவனம் செலுத்தும்.
நான்காம் மற்றும் ஐந்தாம் படிவ மாணவர்களுக்கான இத்திட்டத்தில் மலாய், ஆங்கிலம், கணிதம், அறிவியல், வரலாறு மற்றும் கூடுதல் கணிதம் பாடங்களில் கவனம் செலுத்தப்படும். இந்த திட்டம் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த கல்வியில் பிந்தங்கிய மாணவர்களை இலக்காகக் கொண்டுள்ளது.
சிலாங்கூர் 2025 பட்ஜெட்டில் நான்காம் மற்றும் ஐந்தாம் படிவ மாணவர்களை உள்ளடக்கிய இத்திட்டத்திற்கு RM10 மில்லியனும், தொடக்கப் பள்ளிகளில் எழுத்தறிவு மற்றும் எண்ணியல் தலையீடு திட்டங்களுக்கு RM1 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது.


