SELANGOR

கால்வாய்களை சுத்தம் செய்து டிங்கி காய்ச்சல் பரவாமல் தடுக்க வேண்டும்

5 ஜனவரி 2025, 7:08 AM
கால்வாய்களை சுத்தம் செய்து டிங்கி காய்ச்சல் பரவாமல் தடுக்க வேண்டும்

கோலா சிலாங்கூர், ஜன. 5: கடந்த வார வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாமான் ஶ்ரீ ஆலம், சவுஜானா உத்தாமா குடியிருப்புப் பகுதியில் உள்ள கால்வாய்களை சுத்தம் செய்து ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இந்த நடவடிக்கையானது பொது சுகாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் டிங்கி காய்ச்சல் சம்பவங்களை தடுக்க முடியும் என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மட் கூறினார்.

நாங்கள் டிங்கி காய்ச்சல் பரவாமல் தடுக்க முயற்சி செய்கிறோம். ஏனென்றால் பொதுவாக வெள்ளத்திற்குப் பிறகு கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் பல நீர்த்தேக்கங்களால் இந்த நோய் பரவும்.

"கால்வாய்கள் மற்றும் பூந்தொட்டிகளால் டிங்கி காய்ச்சல் பரவ வாய்ப்புணடு. தொற்று நோய் ஏற்படாதவாறு சுற்றுசூழல் சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நீர்ப்பிடிப்பு குளத்தை உருவாக்குபவர்களும் தங்கள் கட்டுமான தளங்களை பராமரிக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.

முன்னதாக, கோலா சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் வெள்ளம் அமைந்துள்ள பகுதியை ஆய்வு செய்ததுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளையும் வழங்கினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.