ஷா ஆலம், ஜன 3: நாளை கோலா சிலாங்கூரில் உள்ள பந்தாய் ரெமிஸில் நடைபெறும் Jelajah Belia Madani நிகழ்வில் அமீர் உகேஸ் மற்றும் சில பிரபல கலைஞர்கள் கலந்து கொள்வர்.
மேலும், காலை 9 மணிக்கு தொடங்கும் மீன்பிடி போட்டியில் RM2,000 ரொக்கப் பரிசை வெல்லும் வாய்ப்பும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கும் இலவசமாக சூப டூபா விளையாட்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், அவர்கள் வண்ணம் தீட்டும் மற்றும் காத்தாடி போட்டிகளிலும் பங்கேற்கலாம்.
இந்நிகழ்வின் மூன்றாம் தொடரை காலை 9 மணிக்கு இளைஞர் மற்றும் விளையாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமி அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைப்பார்.
கடந்த அக்டோபரில் இந்நிகழ்வு முதன் முறையாக சிப்பாங்கிலும் பிறகு பெட்டாலிங்கிலும் ஏற்பாடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


