SELANGOR

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 300 உணவுக் கூடைகள் விநியோகம்

3 ஜனவரி 2025, 3:52 AM
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 300 உணவுக் கூடைகள் விநியோகம்

கோலா சிலாங்கூர், ஜன 3: எம்பிஐ தனது அறக்கட்டளை மூலம் 300 உணவுக் கூடைகளை தாமான் ஶ்ரீ ஆலம், சௌஜானா உத்தாமா, சுங்கை பூலோவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கியது.

தாமான் ஶ்ரீ ஆலம் குடியிருப்பாளர்கள் சங்கத்திற்கு நலன்புரி அல்லது அப்பகுதியில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்காக RM10,000 அனுப்பப்பட்டது என குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி கூறினார்.

"வெள்ளம் ஏற்பட்ட முதல் நாளில், குடியிருப்பாளர்களுக்கு ஒரு நாளைக்கு 300 பேக்கேட் சமைத்த உணவுகளை எம்பிஐ வழங்கியது. இந்நடவடிக்கை நாளை வரை மேற்கொள்ள்ப்படும்" என்று டத்தோ டிஎஸ் சாய்போலியாசன் எம் யூசோப் கூறினார்.

பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் குடியிருப்பாளர்களின் வீடுகளை வெள்ளத்திற்குப் பின் சுத்தம் செய்யும் பணிகளுக்கு உதவ KDEB கழிவு மேலாண்மை (KDEBWM) அதிகாரிகளையும் எம்பிஐ அனுப்பியது.

"குடியிருப்பாளர்களுக்கு சேதம் அடைந்த பொருட்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை எளிதாக்க கேடிஇபிடபிள்யூஎம் உதவுகிறது.

"துப்புரவு பணி முடிந்துவிட்டது. ஆனால், ஏதேனும் தேவை இருந்தால், நாங்கள் உதவ தயாராக இருக்கிறோம். அதே நேரத்தில், கவுன்சில் உறுப்பினர்களும், கோலா சிலாங்கூர் நகராண்மை கழக விரைவுப் படையும் (MPKS) தேவையான உதவிகளை வழங்கியது, "என்றார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.