SELANGOR

இவ்வாண்டும் காஜாங் தொகுதியில் “Kajang Bersih, Kajang di Hatiku“ பிரச்சாரம் தொடரப்படும்

2 ஜனவரி 2025, 9:23 AM
இவ்வாண்டும் காஜாங் தொகுதியில் “Kajang Bersih, Kajang di Hatiku“ பிரச்சாரம் தொடரப்படும்

ஷா ஆலம், ஜன 2: சமூகத்தினரிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வைத் தொடர்ந்து வளர்ப்பதற்காக காஜாங் தொகுதியில் இவ்வாண்டும் “Kajang Bersih, Kajang di Hatiku“ பிரச்சாரம் தொடரப்படும்.

கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இப்பிரச்சாரம், மாணவர்களிடையே சுகாதார நடைமுறைகளை வளர்ப்பது தொடர்பாக தொகுதியில் உள்ள பள்ளிகளுக்கு கொண்டு சேர்க்கப்பட்டது என சட்டமன்ற உறுப்பினர் டேவிட் சியோங் தெரிவித்தார்.

இந்த ஆண்டு தனது தரப்பு காஜாங் தொகுதியில் உள்ள நதிகளை அழகுபடுத்தும் நோக்கில் ஆற்றின் கரையில் மரம் நடும் திட்டங்களுடன் பிரச்சாரத்தை தொடர திட்டமிட்டுள்ளது.

"இந்தப் பிரச்சாரத்தைத் தொடர்வோம். இந்த ஆண்டு நதியை அழகுபடுத்தும் திட்டம் தொடங்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. கரைகளின் ஆயுளை மேம்படுத்துவதோடு, ஆற்றங்கரையைச் சுற்றி சட்டவிரோதமாக குப்பைகள் கொட்டப்படுவதைத் தவிர்க்கும் முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும்.

"நாங்கள் அரசு சாரா நிறுவனங்களுடன் ஒத்துழைக்க திட்டமிட்டுள்ளோம்.இது தொடர்பாக பல தரப்புகளையும் மற்றும் துறைகளையும் தனது தரப்பு சந்தித்து உள்ளதாக அவர் கூறினார். அவர்களிடமிருந்து மரங்களின் விநியோகத்தை பெற முடியும் என்று நம்புகிறேன்

இது தவிர, தொகுதியில் திடீர் வெள்ளப் பிரச்சனையைத் தீர்ப்பதிலும் கவனம் செலுத்தப்படுகிறது என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.