SELANGOR

55 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி மூலம் 2,806 தொழில்முனைவோருக்கு உதவி - ஹிஜ்ரா

2 ஜனவரி 2025, 6:01 AM
55 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி மூலம் 2,806 தொழில்முனைவோருக்கு உதவி - ஹிஜ்ரா

ஷா ஆலம், ஜன 2: கடந்த 2024 ம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை மொத்தம் 55 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி மூலம் 2,806 தொழில் முனைவோருக்கு யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் உதவி வழங்கியுள்ளது.

மாநிலத்தில் உள்ள தொழில் முனைவோரின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் வணிகத்தை விரிவுபடுத்துவதற்கான கூடுதல் மூலதன உதவி வழங்கப்படுகிறது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது

"ஹிஜ்ரா சிலாங்கூர் நிதியுதவித் திட்டத்தைப் பற்றி மேலும் அறிய விரும்புகிறீர்களா? எங்களை முகநூல் அல்லது இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொள்ளவும் மற்றும் www.hijrahselangor.com ஐப் பார்வையிடவும் " என்று தெரிவிக்கப்பட்டது.

ஐ-பிஸ்னஸ் மற்றும் நாடி திட்டமானது தொழில்முனைவோருக்கு சிறு தொழில் தொடங்க அல்லது செயல்பாட்டு மூலதனத்தை அதிகரிக்க RM50,000 வரை நிதியுதவி வழங்குகிறது.

சிலாங்கூர் பிளாட்ஃபார்ம் (U-PLATS) பங்கேற்பாளர்களுக்கு RM3,000 சிறப்பு நிதியுதவியையும் ஹிஜ்ரா வழங்குகிறது.

2015 இல் தொடங்கப்பட்டதிலிருந்து கடந்த ஆகஸ்ட் வரை 90,475 நிதியுதவிகளுக்கு தனது தரப்பு ஒப்புதல் அளித்துள்ளது என்று ஹிஜ்ரா சிலாங்கூர் தலைமை நிர்வாக அதிகாரி கூறினார்.

இந்த நிதியுதவியானது 60,249 ஹிஜ்ரா சிலாங்கூர் தொழில்முனைவோருக்கு பயனளித்துள்ளது. இதன் மூலம், அவர்கள் தங்கள் வணிகங்களை விரிவுபடுத்த முடிந்ததாக டத்தோ மரியா ஹம்சா கூறினார்.

கடந்த ஆண்டு நிறுவனத்தின் ஒன்பதாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு தொழில்முனைவோருக்கு RM1 பில்லியன் கடன்களை வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.