SELANGOR

பண்டான் உத்தாமாவில் புதிய எஹ்சான் மார்ட் கடை திறப்பு

2 ஜனவரி 2025, 3:08 AM
பண்டான் உத்தாமாவில் புதிய எஹ்சான் மார்ட் கடை திறப்பு

ஷா ஆலம், ஜனவரி 2: இன்று பண்டான் உத்தாமாவில் புதிய எஹ்சான் மார்ட் கடை திறக்கப்பட்டதை முன்னிட்டு பொதுமக்களூக்கு பல தள்ளுப்படிகளை சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகம் (பிகேபிஎஸ்) அறிவித்தது.

இந்த பல்பொருள் அங்காடியில் சமையல் பொருட்களை நியாயமான விலையில் வழங்குவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 8 அன்று, பிகேபிஎஸ் அதன் முதல் எஹ்சான் மார்ட் கடையை தொடங்கியது, இது வெளிப்புற சந்தை விலைகளுடன் ஒப்பிடும்போது அடிப்படை பொருட்களின் விலை 15 சதவீதம் வரை குறைவாக உள்ளது.

இந்த திட்டம் அனைத்து தொகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றூ தெரிவிக்கப்பட்டது.

எஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை திட்டத்தின் முன்னேற்றமாக எஹ்சான் மார்ட் திட்டம் உருவாக்கப்பட்டது. இத்திட்டம் 2027 ஆம் ஆண்டுக்குள் 56 தொகுதிகளிலும் திறக்கப்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.