SELANGOR

வெள்ளத்தால் சேதமடைந்த அடிப்படை வசதிகளை சரிசெய்வதற்கான நடவடிக்கையில் கவனம் செலுத்தப்படும்

31 டிசம்பர் 2024, 9:09 AM
வெள்ளத்தால் சேதமடைந்த அடிப்படை வசதிகளை சரிசெய்வதற்கான நடவடிக்கையில் கவனம் செலுத்தப்படும்

ஷா ஆலம், டிச 31: 2021 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் சேதமடைந்த அடிப்படை வசதிகளை சரிசெய்வதற்கான நடவடிக்கையில் அடுத்த ஆண்டு கவனம் செலுத்தப்படும் என டுசுன் துவா சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

சேதமடைந்த சாலைகள், ஆறுகள், இடிந்து விழுந்த பாலங்கள் மற்றும் பொது திடல்களை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக டத்தோ ஜோஹான் அப்துட் அசிஸ் கூறினார்.

ஒன்பதாவது மைல் முதல் 18 மைல் வரை பகுதி வாரியாக வெள்ளத் தணிப்புத் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு மத்தியில் தொடங்கும்.

இத்திட்டத்திற்கு தேவைப்படும் RM512 மில்லியன் மத்திய அரசு ஏற்கும்.

"அடுத்த ஆண்டிற்கான பத்தாவது மைல்,16 மைல் மற்றும் கம்போங் மலாக்காவில் ஆற்றை ஆழப்படுத்தும் பணிக்காக மாநில அரசு RM22 மில்லியனையும் ஒதுக்கியுள்ளது.

டூசுன் துவாவை சுற்றுலா மையமாக மாற்றுவதே எனது எண்ணம்" என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.

மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் குறிப்பாக டூசுன் துவாவில் அடிக்கடி ஏற்படும் வெள்ளத்தின் அபாயத்தைக் குறைக்க 2025 ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டுள்ள அனைத்து வெள்ளத் தணிப்பு மேம்பாட்டுத் திட்டங்களும் சீராக நடக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.