SELANGOR

பத்து தீகா தொகுதி ஏற்பாட்டில் புத்தாண்டு கொண்டாட்டம்- பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

31 டிசம்பர் 2024, 2:03 AM
பத்து தீகா தொகுதி ஏற்பாட்டில் புத்தாண்டு கொண்டாட்டம்- பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

ஷா ஆலம, டிச. 31 - நாளை மலரவிருக்கும் 2025ஆம் ஆண்டை

வரவேற்கும் விதமாக பத்து தீகா சட்டமன்றத் தொகுதி இங்குள்ள செக்சன்

24 டேவான் பெரிங்கினில் சிறப்பு கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு

செய்துள்ளது.

இரவு மணி 8.00 தொடங்கி விடியற்காலை 1.00 மணி வரை நீடிக்கும் இந்த

கொண்டாட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக

தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டேனியால் அல்-ரஷிட் கூறினார்.

கூட்டு சமையல், மக்கள் விருந்து உள்ளிட்ட நிகழ்வுகளுடன் தொடங்கும்

இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் சிறப்பு அங்கமாக மைபி3 செயலியும்

பத்து தீகா தொகுதிக்கான சிறப்பு பாடலும் அறிமுகப்படுத்தப்படும் என்று

அவர் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டிற்கு விடை கொடுத்து 2025ஆம் ஆண்டை வரவேற்கும்

இந்த நிகழ்வில் நாம் உற்சாகத்துடன் பங்கேற்போம் என்று அவர் தனது

பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் சிறப்பு அங்கமாக அதிர்ஷ்டக் குலுக்கு, வான வேடிக்கை,

அலங்கார சைக்கிள் உள்ளிட்ட அங்கங்களும் இடம் பெறும் என அவர்

சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.