SELANGOR

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ எம்பிஐ RM30,000 வழங்கியது

30 டிசம்பர் 2024, 9:10 AM
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ எம்பிஐ RM30,000 வழங்கியது

ஷா ஆலம், டிச 30: தாமான் ஶ்ரீ ஆலம், சௌஜானா உத்தாமா, சுங்கை பூலோவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 400 பேருக்கு உதவ எம்பிஐ RM30,000 வழங்கியது.

நேற்று முதல் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சமைக்கப்பட்ட உணவுகள் மற்றும் உணவு கூடைகள் விநியோகிக்கப்படுவதாகவும் எம்பிஐ தலைவர் அஹ்மட் அஸ்ரி சைனல் நோர் தெரிவித்தார்

"இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், யாயாசான் எம்பிஐ கவுன்சில் உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் உணவுக்கான உதவி தொடர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டது.

"இந்த உதவி மாநில அரசின் அக்கறையின் பிரதிபலிப்பாகும். மேலும், இது பாதிக்கப்பட்டவர்களின் சுமையை குறைக்கும் என்று நம்புகிறோம்," என அவர் கூறினார்.

தாமான் ஶ்ரீ ஆலமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவைப்பட்டால் மற்ற உதவிகளை செய்யத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

"தற்போது, நாங்கள் உணவு வழங்கும் பணியில் மட்டுமே ஈடுப்பட்டு வருகிறோம், ஆனால், வேறு கோரிக்கைகள் இருந்தால் அதைப் பற்றி கருத்தில் கொள்வோம்," என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.