SELANGOR

TMS2025 மூலம் சிலாங்கூர் அரசாங்கம் RM11.7 பில்லியன் பரிவர்த்தனை மதிப்பை இலக்காகக் கொண்டுள்ளது

30 டிசம்பர் 2024, 8:44 AM
TMS2025 மூலம் சிலாங்கூர் அரசாங்கம் RM11.7 பில்லியன் பரிவர்த்தனை மதிப்பை இலக்காகக் கொண்டுள்ளது

சுங்கை பெசார், டிச 30: 2025ஆம் ஆண்டு சிலாங்கூருக்கு வருகை தாருங்கள் (TMS2025) பிரச்சாரத்தின் மூலம் சிலாங்கூர் அரசாங்கம் RM11.7 பில்லியன் பரிவர்த்தனை மதிப்பை இலக்காகக் கொண்டுள்ளது என்று சுற்றுலா மற்றும் உள்ளூர் அரசு ஆட்சிக்குழு உறுப்பினர் இங் சுய் லிம் கூறினார்.

நடவடிக்கைகள், திட்டங்கள் மற்றும் சுற்றுலா உள்கட்டமைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துவது மூலம் இலக்கை அடைய முடியும். இதன் மூலம் எட்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் இருப்பை இலக்காகப் பெற முடியும் என்று அவர் கூறினார்.

"சுற்றுலா உள்கட்டமைப்பு தொடர்பான திட்டங்களைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டு முதல் அனைத்தும் செயல்படுத்தப்படுவதை நாங்கள் உறுதி செய்துள்ளோம். மேலும், பிபிடிகள் மற்றும் தொழில்துறையினர் அதிகமான சுற்றுலாப் பயணிகளின் வருகைக்காக தயாராக இருப்பதை நான் காண்கிறேன்.

இத்திட்டத்தை மாநிலங்களவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிபிடி, சுற்றுலா ஏஜென்சிகள் என அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்போடு, நாங்கள் தொடர்ந்து விளம்பரப்படுத்துவோம்.இதன் மூலம், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைவோம் என்று நான் நம்புகிறேன்," என அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.