SELANGOR

சைபர்ஜெயா பூனை பூங்கா தற்காலிகமாக பொதுமக்களுக்கு மூடப்படும்

30 டிசம்பர் 2024, 8:42 AM
சைபர்ஜெயா பூனை பூங்கா தற்காலிகமாக பொதுமக்களுக்கு மூடப்படும்

ஷா ஆலம், டிச 30: ஜனவரி 5 முதல் மூன்று நாட்களுக்கு தாமான் தாசேக் சைபர்ஜெயாவில் உள்ள சைபர்ஜெயா பூனை பூங்கா தற்காலிகமாக பொதுமக்களுக்கு மூடப்படும்.

பராமரிப்பு பணிகளுக்காக 1,000 சதுர அடி கொண்ட அப்பூனை பூங்கா மூடப்படும் என முகநூல் மூலம் சிப்பாங் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம், இந்த பூனை பூங்காவை சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி நோராஷிகின் திறந்து வைத்தார்.

இந்த பூங்காவில் ஒரே நேரத்தில் 200 முதல் 300 பூனைகளை பராமரிக்க முடியும்.

பூங்காவில் கிளினிக், தீவிர சிகிச்சை பிரிவு, மறுவாழ்வு பிரிவு, தாய் மற்றும் குட்டிகளுக்கான சிகிச்சை பிரிவு ஆகியவை உள்ளன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.