SELANGOR

TMS2025 - சுற்றுலா பயணிகளின் நலன் மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்

30 டிசம்பர் 2024, 5:47 AM
TMS2025 - சுற்றுலா பயணிகளின் நலன் மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்

ஷா ஆலம், டிச 30: 2025ஆம் ஆண்டு சிலாங்கூருக்கு வருகை தாருங்கள் (TMS2025) பிரச்சாரத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் நலன் மற்றும் வசதியைப் பாதுகாக்க அனைத்து அம்சங்களும், குறிப்பாக பாதுகாப்பு முழுமையாக ஆய்வு செய்யப்படுகிறது.

தொழில்துறைமுனைவோர், குறிப்பாக ஹோட்டல் நிர்வாகம் மற்றும் தீம் பார்ட்னர்கள், வருகையாளர்களின் விவகாரங்கள் சீராக நடைபெறுவதை உறுதிசெய்யத் தயாராக இருப்பதாக சுற்றுலா ஆட்சிகுழு உறுப்பினர் தெரிவித்தார்.

"உள்கட்டமைப்பு, பாதுகாப்பு உட்பட அனைத்து அம்சங்களிலும் கவனம் செலுத்தப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் சிலாங்கூருக்கு வருகை புரியும் போது அனைத்தும் சீரான முறையில் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்," என டத்தோ இங் சுயி லிம் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

அதே நேரத்தில், முக்கிய பகுதிகளில் விளம்பரப் பலகைகளை நிறுவுவதை அதிகரிப்பதன் மூலம் இத்திட்டத்தை ஊக்குவிக்கும் பணி தீவிரமாக தொடரும் என்றார்

"சமூக ஊடகங்கள் மூலம் சுவாரஸ்யமான இடங்களை விளம்பரப்படுத்தும் நடவடிக்கை தொடருவோம்," என்று அவர் கூறினார்.

அடுத்த ஆண்டு முழுவதும் 60க்கும் மேற்பட்ட திட்டங்களை வழங்கும் TMS2025, RM11.7 பில்லியன் இலக்குடன் எட்டு மில்லியன் உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.