SELANGOR

சமூகத் தோட்டத் திட்டத்தின் பங்கேற்பாளர்களுக்கு RM450,000 நிதி ஒதுக்கீடு

30 டிசம்பர் 2024, 4:36 AM
சமூகத் தோட்டத் திட்டத்தின் பங்கேற்பாளர்களுக்கு RM450,000 நிதி ஒதுக்கீடு

ஷா ஆலம், டிச 30: சமூகத் தோட்டத் திட்டத்தின் பங்கேற்பாளர்கள் 30 பேருக்கு விவசாய பொருள்கள் வழங்கும் நடவடிக்கைக்காக மொத்தம் RM450,000 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று விவசாய ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.

அனைத்து பிபிடிகளிலும் ஆறு சமூகத் தோட்டங்களில் மெலன் பழத் திட்டத்தை செயல்படுத்துவதும் இந்த உதவி விநியோகத்தில் அடங்கும் என்று டத்தோ இஷாம் ஹாஷிம் கூறினார்.

"இந்த உதவியின் மூலம், விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதோடு அவர்கள் தரமான விவசாயத்தில் ஈடுபடுவதை ஊக்குவிக்க முடியும் என்று நான் நம்புகிறேன்," என அவர் முகநூலில் தெரிவித்தார்.

இந்த ஆண்டு முழுவதும் விவசாயத் துறைக்கு மாநில அரசு கிட்டத்தட்ட 5 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது என இஷாம் தெரிவித்தார். அதில் பெரும்பாலானவை நவீன மற்றும் உயர் மதிப்புள்ள விவசாயத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டன.

மாநில நிர்வாகத்திலிருந்து RM2.75 மில்லியனும், மத்திய அரசாங்கத்தின் RM2.2 மில்லியனும் இந்த உதவில் உள்ளடக்கியது என்று அவர் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.