SELANGOR

கோத்தா கெமுனிங் தொகுதி அளவில் பள்ளி நுழைவு உதவியை வழங்கும் நிகழ்வு

27 டிசம்பர் 2024, 9:42 AM
கோத்தா கெமுனிங் தொகுதி அளவில் பள்ளி நுழைவு உதவியை வழங்கும் நிகழ்வு

ஷா ஆலம், டிச 27: எதிர்வரும் 2025 ஆம் ஆண்டுக்கான கோத்தா கெமுனிங் தொகுதி அளவில் பள்ளி நுழைவு உதவியை வழங்கும் நிகழ்வு எதிர்வரும் ஞாயிறு அன்று நடைபெறும்.

இந்நிகழ்வு காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை கோத்தா கெமுனிங் தொகுதியின் சமூக சேவை மைய அலுவலக வளாகத்தில் நடைபெறும். இதில் தாவாஸ் உறுப்பினர்களுக்கு குறிப்பிட்ட உதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்த நிகழ்வு தாவாஸ் உறுப்பினர்களுக்கு மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனால், இத்தொகுதியில் உள்ள தாவாஸ் உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயன் அடையுமாறு கேட்டு கொள்ளப்பட்டது.

பொதுமக்கள் https://tawas.yawas.my/admin/semakan_pbms.php என்ற இணையத்தளம் மூலம் தாங்கள் இந்த உதவியை பெற முடியுமா என்பதை சரிபார்த்து கொள்ளலாம்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.