SELANGOR

விசிட் சிலாங்கூர் டிஜிட்டல் போர்டல் (visitselangor2025.my) பல்வேறு சுற்றுலா தகவல்களை வழங்குகிறது

26 டிசம்பர் 2024, 4:47 AM
விசிட் சிலாங்கூர் டிஜிட்டல் போர்டல் (visitselangor2025.my) பல்வேறு சுற்றுலா தகவல்களை வழங்குகிறது

ஷா ஆலம், டிச 26: சிலாங்கூருக்கு வருகை தாருங்கள் 2025 (TMS2025)பிரச்சாரத்தை முன்னிட்டு தொடங்கப்பட்ட visitselangor2025.my டிஜிட்டல் போர்ட்டல் சிலாங்கூரில் கவர்ச்சிகரமான சுற்றுலா தொகுப்பு சலுகைகள் உட்பட பல்வேறு தகவல்களை வழங்குகிறது.

புதுப்பிக்கப்பட்ட போர்ட்டல் டிசம்பர் 21ஆம் தேதி அறிமுகம் கண்ட பின் சிலாங்கூர் சுற்றுலாத்துறையை பற்றி பல்வேறு தகவல்களை பொதுமக்கள் கண்டறிய முடியும் என்று சிலாங்கூர் சுற்றுலாத்துறையின் தலைமை நிர்வாக அதிகாரி அஸ்ருல் ஷா முகமட் கூறினார்.

"இந்த டிஜிட்டல் போர்ட்டல் சுற்றுலாப் பயணிகளுக்கு தகவல் மையமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.இதில் சிலாங்கூர் முழுவதும் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் கண்காட்சிகள் உட்பட பல்வேறு புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் இடம்பெறும்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, TMS 2025 கொண்டாட்டத்தை முன்னிட்டு visitselangor2025.my பிரச்சார டிஜிட்டல் போர்ட்டலை டத்தோ மந்திரி புசார் தொடங்கினார்.

இன்ஸ்டாகிராம், முகநூல், டிக்டோக்,மற்றும் எக்ஸ் பக்கம் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் டிஜிட்டல் போர்ட்டலை வீடியோக்கள் மற்றும் இன்போ கிராபிக்ஸ் போன்ற வடிவங்களில் தீவிரமாக விளம்பரப்படுத்துவதாகவும் அஸ்ருல் ஷா தெரிவித்தார்

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.