சிப்பாங், டிச. 19 - சிப்பாங் நகராண்மை கழகம் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் பயன் பாட்டிற்கு தடை விதித்துள்ளது. இதன் மூலம், அடுத்த ஆண்டு அதன் மேற்பார்வையில் உள்ள அனைத்து ரம்ஜான் பஜார்களிலும் பிளாஸ்டிக் இல்லா திட்டத்தை மேம்படுத்துகிறது.
பிளாஸ்டிக் இல்லாத பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்க வருகையாளர்கள் தங்கள் சொந்த உணவுக் கொள்கலன்களை ரம்ஜான் பஜார்களுக்கு கொண்டு வர ஊக்குவிக்கப் படுகிறார்கள் என சிப்பாங் நகராண்மை கழக துணைத் தலைவர் முகமட் ஒஸ்மின் கூறினார்.
“இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவது, இதுபோன்ற பிரச்சாரங்களை ஆதரிப்பதன் மூலம் சுற்றுச் சூழலைப் பராமரிப்பது எவ்வளவு முக்கியம் என்பது குறித்த விழிப்புணர்வையும் வெளிப்பாட்டையும் உள்ளூர் சமூகத்திற்கு மறைமுகமாக உணர்த்த முடியும்,” என்று அவர் தெரிவித்தார்.
டிசம்பர் 9 முதல் திறந்திருக்கும் ரம்ஜான் பஜார்களுக்கான இணைய விண்ணப்பத்தின் கால அவகாசம் ஜனவரி 6, 2025 அன்று முடிவடையும் என்று அவர் கூறினார்.
- பெர்னாமா


