SELANGOR

காகாசான் ரும்புன் சிலாங்கூர் புதிய அம்சங்களுடன் அடுத்த ஆண்டும் தொடரும்

19 டிசம்பர் 2024, 3:04 AM
காகாசான் ரும்புன் சிலாங்கூர் புதிய அம்சங்களுடன் அடுத்த ஆண்டும் தொடரும்

ஷா ஆலம், டிச 19: மாநிலத்தில் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான திட்டமான காகாசான் ரும்புன் சிலாங்கூர் முன்பை விட வித்தியாசமான அம்சங்களுடன் அடுத்த ஆண்டும் தொடரும் என்று ஒற்றுமை ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.

2025ஆம் ஆண்டு சிலாங்கூருக்கு வருகை தாருங்கள் (TMS2025) பிரச்சாரத்தோடு

ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கைகளைத் தனது தரப்பு ஏற்பாடு செய்து வருகிறது என டத்தோ ரிசாம் இஸ்மாயில் கூறினார்.

"இந்த முறை செயல்படுத்தப்படும் நடவடிக்கைகள் முற்றிலும் மாறுபட்டது மற்றும் பொருத்தமானவை.இதில் சிலாங்கூர் ராஜா மூடா தெங்கு அமீர் ஷா அவர்களும் சம்பந்தப்ப்பட்டுள்ளார் என்பதனால் நடவடிக்கைகளை ஏற்பாடு செய்யும் செயல்முறை இன்னும் விவாதத்தில் உள்ளது," என்று அவர் தனது அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்

பன்முகத்தன்மையைக் கொண்டாடவும், மாநிலத்தில் ஒற்றுமை உணர்வைத் தூண்டவும் காகாசான் ரும்புன் சிலாங்கூர் அறிமுகப்படுத்தப்பட்டது என்று டத்தோ மந்திரி புசார் முன்னதாக தெரிவித்தார்.

இந்த திட்டத்தின் மூலம், கார்னிவல் மற்றும் ஒற்றுமை பயணம் ஒன்பது மாவட்டங்களில் RM4.5 மில்லியன் ஒதுக்கீட்டில் நடத்தப்பட்டது என்றார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.