SELANGOR

புதிய திறமைசாலிகளை அடையாளம் காண பல்வேறு இ-ஸ்போர்ட்ஸ் போட்டிகள் நடத்தப் படுகின்றன

17 டிசம்பர் 2024, 9:44 AM
புதிய திறமைசாலிகளை அடையாளம் காண பல்வேறு இ-ஸ்போர்ட்ஸ் போட்டிகள் நடத்தப் படுகின்றன

ஷா ஆலம், டிச 17: மாநில அரசு சிலாங்கூர் ரெட் ஜெயண்ட்ஸ் (எஸ்ஆர்ஜி) அணி மற்றும் அகாடமி தோடக் ஆகியவற்றுடன் இணைந்து புதிய திறமைசாலிகளை அடையாளம் காண பல்வேறு இ-ஸ்போர்ட்ஸ் போட்டிகள் நடத்துகிறது.

இந்த நடவடிக்கையானது விளையாட்டு சுற்றுச்சூழலுக்கான தொடர்ச்சியான மேம்பாட்டு திட்டத்தை கண்டுபிடிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என விளையாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமி கூறினார்.

"சமீபத்தில் பெட்டாலிங் மாவட்டத்தில் உள்ள 32 இடைநிலைப் பள்ளிகளின் ஈடுபாட்டுடன் எஸ்ஆர்ஜி மற்றும் அகாடமி தோடக் உடன் இணைந்து இ-ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

"இந்த மாத இறுதியில், சிலாங்கூர் ஃபீச்சர் கோப்பை எனப்படும் மற்றொரு போட்டியை நடத்துவோம். இதில் மாநிலம் முழுவதும் உள்ள 128 பள்ளிகள் பங்கேற்கும்," என்று அவர் சிலாங்கூர் டிவி ஒளிபரப்பிய SKOP நிகழ்ச்சியில் கூறினார்.

இதற்கிடையில், இ-ஸ்போர்ட்ஸ் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடையே அதிக ஆதரவைப் பெற்று வருவதாகவும், அதன் பங்கு இப்போது தொழில்முறை வாழ்க்கையை உருவாக்கும் திறன் கொண்ட ஒரு தொழிலாக வளர்ந்திருப்பதாகவும் நஜ்வான் கூறினார்.

"இ-ஸ்போர்ட்ஸ் விளையாட்டுகள் புறக்கணிக்கப் பட்டவை மற்றும் குழந்தைகளுக்கு கூடுதல் மதிப்பை வழங்குவதில்லை என்ற கருத்தை இது நிராகரிக்கிறது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.