சபாக் பெர்ணம், டிச 17: புதிய மற்றும் கவர்ச்சிகரமான தயாரிப்புகளை முன்னிலைப்படுத்த சுற்றுலாத் துறை தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் மானியங்கள் அடுத்த ஆண்டு விநியோகிக்கப்படும்.
RM200,000 மதிப்புள்ள மானியம், 2025 ஆண்டு சிலாங்கூருக்கு வருகை தாருங்கள் பிரச்சாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு அம்சங்களில் கவனம் செலுத்த உதவும் என்று சுற்றுலா ஆட்சிக்குழு உறுப்பினர் கூறினார்.
"சிலாங்கூருக்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் அவர்களின் சொந்த தயாரிப்புகளை உற்பத்தி செய்ய ஊக்குவிக்கும் வகையில் சமீபத்திய ஒப்புதல் மானியங்கள் உட்பட சுற்றுலாத் துறை தொழில் முனைவோருக்கு பல்வேறு சலுகைகளை மாநில அரசு வழங்குகிறது.
"இந்த மானியம் அடுத்த ஆண்டு விநியோகிக்கத் தொடங்கும். மேலும், இது சுற்றுலா சங்கங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்கு திறக்கப்பட்டுள்ளது.அதற்கு புறநகர் தொழிலதிபர்கள் உட்பட அனைவரும் விண்ணப்பிக்கலாம்" என்று டத்தோ இங் சுயி லிம் கூறினார்.
கடந்த நவம்பரில், 2025 ஆண்டு சிலாங்கூருக்கு வருகை தாருங்கள் பிரச்சாரத்தின் முன் வெளியீட்டில், புதிய மற்றும் கவர்ச்சிகரமான தயாரிப்புகளை முன்னிலைப்படுத்த சுற்றுலாத் துறை தொழில் முனைவோரை ஊக்குவிக்க மாநில அரசு RM200,000 மானியம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் அறிவித்தார்.
20 தொழில் ஆர்வலர்களுக்கு பயனளிக்கும் இந்த மானியம், கோவிட் -19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிறகு,இத்துறை தொடர்ந்து மீண்டு வருவதையும் வளர்ச்சியடைவதையும் உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.


