ஷா ஆலம், டிச 17: இந்த ஆண்டு காகாசான் ரும்புன் சிலாங்கூர் முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட அடிப்படைப் பொருட்களின் மலிவு விற்பனை மூலம் 15,000க்கும் அதிகமான நுகர்வோர் பயனடைந்துள்ளனர் என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.
சிலாங்கூர் மலேசிய கூட்டுறவு ஆணையத்துடன் (SKM) இணைந்து மாநில அரசு ஏற்பாடு செய்த இத்திட்டம் RM900,000 விற்பனை வருவாயைப் பதிவு செய்தது என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி விளக்கினார்.
"இத்திட்டத்தில் அடிப்படை பொருட்கள் தள்ளுபடி விலையில் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் குறைந்த வருமானம் கொண்ட குழுவிற்கு சுமையை ஓரளவு குறைக்க முடியும்," என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், இந்த விற்பனைத் திட்டம் அடுத்த ஆண்டும் தொடரும் என்றும் எஹ்சான் ரஹ்மா விற்பனை (JER) திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்படும் என்றும் அமிருடின் கூறினார்.


