SELANGOR

60,000 யூனிட் குப்பை தொட்டிகள் இலவசமாக விநியோகிக்கப்படும்

12 டிசம்பர் 2024, 9:45 AM
60,000 யூனிட் குப்பை தொட்டிகள் இலவசமாக விநியோகிக்கப்படும்

ஷா ஆலம், டிச 12: அடுத்த ஆண்டு 120 லிட்டர் கொள்ளளவு கொண்ட மொத்தம் 60,000 யூனிட் குப்பை தொட்டிகள் இலவசமாக விநியோகிக்கப்படும் என சுபாங் ஜெயா மாநகராட்சி தெரிவித்தது.

புதிய மதிப்பீட்டு வரி விகிதங்களை நிர்ணயித்ததைத் தொடர்ந்து, நகராட்சி சேவைகள், திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொது துப்புரவு பணிகளை மேம்படுத்துவதற்கான முன்முயற்சிகளில் இதுவும் ஒன்று என்று அதன் துணை மேயர் சுல்குர்னைன் சே அலி கூறினார்.

மேலும், வெள்ளப்பெருக்கு சம்பவங்களைத் தவிர்ப்பதற்காக கால்வாய்களை பாரமரித்தல் மற்றும் உள்கட்டமைப்பு, தெரு விளக்குகளை மேம்படுத்துதல் போன்றவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது.

"குப்பை சேகரிப்பு போன்ற அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்துகிறோம். எனவே, அடுத்த ஆண்டு 60,000 குப்பைத் தொட்டிகள் குடியிருப்பு வளாகங்கள் மற்றும் கிராமப் பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் கட்டம் கட்டமாக இலவசமாக விநியோகிக்கப்படும் என்றார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.