ஷா ஆலம், அக். 19- தீபாவளியை முன்னிட்டு செந்தோசா சட்டமன்றத்
தொகுதியில் மாநில அரசின் சிறப்பு ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை
இன்று நடைபெறுகிறது.
இந்த விற்பனை தாமான் செந்தோசாவிலுள்ள சோழா உணவகம் எதிரே
இருக்கும் புதன் கிழமை இரவுச் சந்தை வளாகத்தில் காலை 10.00 மணி
முதல் நண்பகல் 12.00 மணி வரை நடைபெறும்.
இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும், ஒரு தட்டு ‘பி‘
கிரேட் முட்டை 10.00 வெள்ளிக்கும், இறைச்சி ஒரு பாக்கெட் 10.00
வெள்ளிக்கும், கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும், 5 கிலோ
சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும், 5 கிலோ அரிசி 13.00
வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.
சந்தையை விட குறைவான விலையில் அத்தியாவசியப் பொருள்களை
விற்பனை செய்யும் இந்த திட்டத்தை மாநில அரசின் துணை நிறுவனமான
சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகம் (பி.கே.பி.எஸ்.) வாரந்தோறும்
நடத்தி வருகிறது.
இந்த மலிவு விற்பனைத் திட்டத்திற்கு மாநில அரசு இதுவரை நான்கு
கோடி வெள்ளியை உதவித் தொகையாக வழங்கியுள்ளது. மாநிலம்
முழுவதும் சுமார் மூவாயிரம் இடங்களில் நடைபெற்ற இந்த மலிவு
விற்பனைகளின் வாயிலாக இதுவரை ஐம்பது லட்சம் பேர்
பயனடைந்துள்ளனர்.
ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை தொடர்பான விபரங்களை
பி.கே.பி.எஸ். அகப்பக்கம் மூலமாகவும் போஸ்டரில் இடம் பெற்றுள்ள
கியூ.ஆர். குறியீட்டை ஸ்கேன் செய்வதன் வாயிலாகவும் அல்லது
http://linktr.ee/myPKPS என்ற அகப்பக்கத்தின் மூலமாகவும் அறிந்து
கொள்ளலாம








