ECONOMY

நீர் தட்டுப்பாட்டை சமாளிக்க சாத்தியமான 100, மாற்று நீராதார குளங்கள் .

8 அக்டோபர் 2024, 12:26 PM
நீர் தட்டுப்பாட்டை சமாளிக்க சாத்தியமான 100, மாற்று நீராதார குளங்கள் .

ஷா ஆலம், 8 அக்: சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம் (LUAS) மாநிலம் முழுவதும் 100 குளங்களை ஒரு மாற்று நீர் ஆதாரமாக பயன்படுத்த கூடிய சாத்தியக் கூறுகளைக் கண்டறிந்துள்ளது.

உள்கட்டமைப்பு  ஆட்சிக்குழு உறுப்பினர், பெஸ்தாரி ஜெயாவில் உள்ள ஒரு நீர்த்தேக்கம் பல செயல்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார். அதனை  வெள்ள தணிப்பு, பொழுதுபோக்கு மற்றும் மாசுபாட்டைத் தணிக்கும் குளமாகவும் பயன்படுத்த முடியும்.

"பெஸ்டாரி ஜெயாவில் அமைந்துள்ள கீழ்நிலை நீர்த் தேக்கம் (ORS) சிலாங்கூர் நதி படுகையில் மாற்று நீர் ஆதாரங்களை வழங்குவதற்கான ஒரு முக்கியமான குளமாகும்.

"ORS பகுதியில் 64.98 ஹெக்டேர் பரப்பளவில் ஆறு குளங்கள் உள்ளன, அவை மூல நீர் உத்தரவாதத் திட்டத்தின் மூலம் முழுமையான உள்கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டு வருகின்றன.

"ரந்தாவ் பாஞ்ஜாங்கின் நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு மாற்று நீர் ஆதாரத்தை வழங்கவல்லது இது " என்று ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹாஷிம் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

ஆறுகள் மற்றும் நீர் வளங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள  உள்ளுர் சமூகங்களை  ஊக்குவித்த அவர்., அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் பெருநிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக சிலாங்கூர் நண்பர்களின் (FOR)  செயல்     போன்ற  செயல் மற்றும்  ஈடுபாட்டை   ஊக்குவிப்பதை LUAS அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

"FOR முன்முயற்சியின் கீழ், பரஸ்பர சுத்தம், சமூக நிகழ்வுகள் மற்றும் பொருத்தமான மற்றும் நன்மை பயக்கும் பொழுதுபோக்கு போன்ற பல்வேறு பயனுள்ள நடவடிக்கைகளை இங்கு மேற்கொள்ளப் ஏற்றதாக உள்ளது.

இங்கு எட்டப்பட்ட மேம்பாடு பல்வேறு தரப்பினரின் கூட்டு முயற்சியால் ஏற்பட்டது. பெஸ்தரி ஜெயாவில் உள்ள குளங்கள் போன்ற மாநிலத்தில் நீர் ஆதார பகுதிகளாக  மற்ற தகுதிவாய்ந்த நீர் நிலைகளையும் மக்கள் கவனித்து பாதுகாக்க முடியும்,'' என்றார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.