ECONOMY

சுங்கை பாக்காப் இடைத் தேர்தல் ஜூலை 6ஆம் தேதி நடைபெறும்- ஜூன் 22இல் வேட்பு மனுத் தாக்கல்

6 ஜூன் 2024, 5:47 AM
சுங்கை பாக்காப் இடைத் தேர்தல் ஜூலை 6ஆம் தேதி நடைபெறும்- ஜூன் 22இல் வேட்பு மனுத் தாக்கல்

புத்ராஜெயா, ஜூன் 6- பினாங்கு மாநிலத்தின் சுங்கை பாக்காப் தொகுதி இடைத் தேர்தல் வரும் ஜூலை 6ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த இடைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நிகழ்வும் தொடக்கக் கட்ட வாக்களிப்பும் முறையே ஜூன் 22 (சனிக்கிழமை) மற்றும் ஜூலை 2ஆம் தேதிகளில் நடைபெறும் என்று தேர்தல் ஆணையத்தின் துணைத் தலைவர் டாக்டர் அஸ்மி ஷாரோம் கூறினார்.

சுங்கை பாக்காப் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலுக்கான முக்கியத் தேதிகளை நிர்ணயிப்பதற்காக இங்குள்ள மெனாரா எஸ்.பி.ஆர். தலைமையகத்தில் இன்று நடைபெற்ற சிறப்புக் கூட்டத்திற்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

சுங்கை பாக்காப் சட்டமன்ற உறுப்பினர் நோர் ஜம்ரி லத்திப் (வயது 56) கடந்த மே 34ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

நாட்டின் பதினைந்தாவது பொதுத் தேர்தல் கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற பிறகு  நடைபெறும் எட்டாவது இடைத் தேர்தலாக சுங்கை பாக்காப் தொகுதி தேர்தல் விளங்குகிறது.

வகைeconomy

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.