ஷா ஆலம், மார்ச் 21: நாடு முழுவதும் மொத்தம் 6.34 மில்லியன் தனிநபர்கள் தங்களது தரவுகளை முதன்மை தரவுத்தளத்தில் (பாடு) நேற்று வரை புதுப் பித்துள்ளனர்.
அமைப்பின் அதிகாரப்பூர்வமான முகநூலின்படி, சிலாங்கூரில் 970,000 பேரின் தகவல் புதுப்பிப்புகளை பதிவு செய்துள்ளர்கள், அதைத் தொடர்ந்து சரவாகில் 770,000 மற்றும் ஜோகூரில் 650,000 பேரும் பதிவு செய்துள்ளனர்.
"மார்ச் 20, இரவு 11.59 மணி நிலவரப்படி, நிர்வாக தரவு ஆதாரங்களின் அடிப்படையில் பாடு அமைப்பில் உள்ள 30.08 மில்லியன் தனிப்பட்ட பதிவுகளில் 6.34 மில்லியன் தனிநபர் தகவல் புதுப்பிப்பு பதிவுகள் செய்துள்ளனர்.
"பாடுவில் தகவலை புதுப்பித்த மலேசியர்களுக்கு நன்றி" என்று அவர் கூறினார்.ஜனவரி 2 ஆம் தேதி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களால் தொடங்கப் பட்ட பாடு, தனிநபர் மற்றும் வீட்டுத் தகவல்களுக்கான ஒரே தளமாக மாறியது, இதன் மூலம் மானியம் மற்றும் உதவி விநியோகத்தின் செயல் திறனை அதிகரிக்க நோக்கம் கொண்டுள்ளது.
www.padu.gov.my என்ற இணையதளம் மூலம் ஜனவரி 2 முதல் மார்ச் 31 வரை பதிவு செய்யலாம்.எதிர்காலத்தில் அரசாங்கம் திட்டமிட்டுள்ள உதவிகளை விநியோகிக்க வசதியாக தகவல்களைப் புதுப்பிப்பது முக்கியம் என்று ஹர்டினி யாக்கோப் கூறினார்.








